சட்டசபையில் ஜெயலலிதா படம்! ஆட்சிக்கு வருகிறது சிக்கல்!

சென்னை: மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் திருவுருவப்படம் சட்டசபையில் திங்கட்கிழமை திறக்கப்பட்டது.

சபாநாயகர் தனபால் படத்தை திறந்துவைத்தார். நிகழ்ச்சியில் சபாநாயகர், முதல்வர், துணை முதல்வர் ஆகியோர் உரையாற்றினர்.

7அடி உயரம், 5அடி அகலத்தில் ஆயில் பெயிண்டிங்கில் தத்ரூபமாக ஜெயலலிதா படம் வரையப்பட்டுள்ளது.  படத்தின் அடியில் அமைதி, வளம், வளர்ச்சி என்று எழுதப்பட்டுள்ளது. ஓவியக்கல்லூரி முன்னாள் முதல்வர் மதியழகன் இப்படத்தை வரைந்துள்ளார்.

ஊழல் வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்டவரின் படத்தை பேரவையில் திறக்க கூடாது என்று எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. நிகழ்ச்சியை புறக்கணித்தன. தினகரனும், இரட்டை இலையில் போட்டியிட்டு வென்ற அன்சாரியும் விழாவுக்கு வரவில்லை.

 

படத்திறப்பு முடிந்ததும் காங்கிரஸ் எம்.எல்.ஏ. விஜயதாரிணி அவைக்கு வந்து சபாநாயகரை வாழ்த்தி சென்றார்.

உயர்நீதிமன்றத்தில் திமுக எம்.எல்.ஏ. அன்பழகன் வழக்கு தொடர்ந்துள்ளார்.
ஊழல் வழக்கில் தண்டனைபெற்றவர் படத்தை பேரவையில் திறப்பது தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்திவிடும்.அனைத்து எதிர்க்கட்சிகளும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததை அரசு உதாசீனம் செய்துவிட்டது.
சபாநாயகர் தனது விசுவாசத்தை நிரூபிக்கும் வகையில் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து ஜெயலலிதா படத்தை திறந்துள்ளார்.  படத்தை அகற்ற உடனே உத்தரவிடவேண்டும் என்றார்.

 

அரசு அலுவலகங்களில் தலைமை நீதிபதி பெஞ்ச் மனுவை விசாரணைக்கு ஏற்றுள்ளது. செவ்வாய்க்கிழமை விசாரணை துவங்குமென தெரிகிறது.
இதற்கிடையே, குற்றவாளி ஒருவர் அரசியல் கட்சி தலைவராக எப்படி இருக்கமுடியும் என்று உச்சநீதிமன்றம் கடுமையான கேள்வி எழுப்பியுள்ளது.

குற்றவாளி என அறிவிக்கப்பட்ட ஒருவரால் தேர்தலில் நேரடியாகப் போட்டியிட முடியாது. ஆனால், அவர் ஒரு கட்சிக்கு தலைமையாக இருக்க முடியும். அந்த கட்சியின் தலைவராக இருந்து, எம்எல்ஏ, எம்பிக்களை கட்டுப்படுத்துகிறார் என்பது மோசமான ஜனநாயக முறையாகும்.

யார் தங்களுக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை ஒரு கிரிமினல் முடிவு செய்வது ஜனநாயகத்தின் சாராம்சத்துக்கு விரோதமானதாகும்.குற்றவாளி என அறிவிக்கப்பட்டவர் அரசியல் கட்சிக்கு தலைவராக இருக்க தடை கொண்டுவருவது குறித்து தேர்தல் சீர்திருத்தம் ஏன் கொண்டுவரக்கூடாது ” எனவும் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. இதனால் அதிமுகவினர் கலக்கம் அடைந்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here