ஓடும் பஸ்சில் வாலிபரின் வக்கிரசெயல்! படமெடுத்து அம்பலப்படுத்தினார் மாணவி!

டெல்லி: ஓடும்பஸ்சில் மாணவிக்கு பாலியல் தொல்லை தந்த வாலிபரின் வக்கிர செயலை படமெடுத்து சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்டுள்ளது.
அதிர்ச்சிதரும் அந்த விடியோவை பார்த்த போலீசார் வாலிபரை தேடிவருகின்றனர்.

டெல்லி பல்கலைக்கழகத்தில் படித்துவரும் மாணவி சுஷ்மிதா(பெயர்மாற்றப்பட்டுள்ளது).
தினந்தோறும் மாநகர பேருந்தில் செல்வது வழக்கம்.
அவ்வாறு செல்லும்போது வக்கிரபுத்தியுள்ள ஒருவன் அம்மாணவியின் அருகே நின்றான்.
அவனது செய்கையை செல்போனில் படமெடுத்தார் மாணவி.

வகுப்பறைக்கு சென்று அதனை பார்த்ததும் மிகவும் அதிர்ச்சியடைந்தார்.  உடன் பயணம்செய்த வக்கிரக்காரன் சுய இன்பம் செய்துவந்த அந்த விடியோவை சமூக ஊடகத்தில் வெளியிட்டார்.

பிரதமர், டெல்லிமுதல்வர், டெல்லி போலீஸ் அதிகாரிகள் கவனத்துக்கும் இதனை கொண்டுவந்தார்.

இதுகுறித்து போலீசில் புகார் செய்த அம்மாணவி கூறுகையில்,
பஸ்சில் அதிகமான கூட்டம் இருந்தபோது பயணம் செய்தேன்.
எனக்கு அருகே இருந்தவன் ஆபாச செய்கையில் ஈடுபட்டான்.
இதுபோன்ற பாலியல் தொல்லை தொடர்பாக பொதுமக்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தவே இதனை வெளியிட்டேன் என்று கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here