தீபா வீட்டில் ரெய்டு! கணவர் மாதவன் சிக்குகிறார்!!

சென்னை:ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவின் வீட்டில் ரெய்டு நடத்தி கைதானவர் தனது வாக்குமூலத்தில் திடுக்கிடும் தகவல் தெரிவித்துள்ளார்.
சென்னை தி. நகரில் தீபா வசித்துவருகிறார்.

கடந்த சனிக்கிழமை தீபாவின் வீட்டுக்கு வந்த நபர் தன்னை வருமானவரி ஆணையாளர் என்று அறிமுகப்படுத்திக்கொண்டார்.
இதுதெரியவந்ததும் தீபா வீட்டுக்கு போலீசார், செய்தியாளர்கள் விரைந்துவந்தனர்.
போலீசார் விசாரணையில் அவர் போலி அதிகாரி என தெரியவந்து கைதானார்.

கைதான நிதிஷ்குமார் அளித்த வாக்குமூலத்தில், தீபாவின் கணவர் மாதவன் தன்னை அதிகாரியாக நடித்து வீட்டில் ரெய்டு நடத்த அழைத்தார்.
மீடியாக்காரர்கள், போலீசார் வந்ததால் தப்பித்து போகுமாறுகூறினார். நானும் சுவர் ஏறிக்குதித்து மாட்டிக்கொண்டேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து மீடியாக்காரர்களின் பதிலை தவிர்த்தார் மாதவன்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here