சென்னையில் பூனை பிரியாணி விற்பனை ஜோர்!

சென்னை:தமிழக தலைநகரில் பூனை பிரியாணி விற்பனை அமோகமாக நடந்து வருகிறது.
சென்னையில் உள்ள ஆவடி, பல்லாவரம், திருமுல்லைவாயில் பகுதிகளில் வீட்டில் வளர்க்கும் பூனைகள் தொடர்ந்து மாயமாகி வந்தன.அப்பகுதியில் வசித்துவரும் சமூக நல ஆர்வலர்கள் இதுகுறித்து தீவிரமாக கண்காணித்துவந்தனர்.
அப்பகுதிகளில் பழங்குடியின மக்கள் கூடாரம் அடித்து தங்கியுள்ளனர்.
அவர்கள் வருகைக்குப்பின் பூனைகள் மாயமாவது அதிகரித்துள்ளது தெரியவந்தது.
பழங்குடியின மக்கள் தங்கள் உணவுத்தேவைக்காக பூனைகளை வேட்டையாடுகின்றனர்.

மேலும், அவற்றைப்பிடித்து அங்குள்ள பிரியாணிகடைகளுக்கும் சப்ளை செய்கின்றனர்.
மட்டன் பிரியாணியில் பூனை கறி கலந்து விற்கப்படுகிறது.
இதுகுறித்து போலீசில் புகார் செய்யப்பட்டது. திருமுல்லைவாயில் போலீசார் பிரியாணிகடைகளில் சோதனை நடத்தினர்.
10பூனைகள் பிரியாணி கடைகளில் இருந்து மீட்கப்பட்டன. இச்சம்பவம் அப்பகுதிகளில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here