விவசாய பட்ஜெட்! பாமக வெளியீடு!!

கோவை: பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் விவசாயத்துக்கான பட்ஜெட் ‘வேளாண் நிதிநிலை அறிக்கை’ வெளியிட்டார்.
பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் 2008ம் ஆண்டில் இருந்து விவசாயத்தை மேம்படுத்துவதற்கான நலத்திட்டங்கள் குறித்து பட்ஜெட் ஆண்டுதோறும் அறிவிக்கப்பட்டு வருகிறது.இந்த ஆண்டுக்கான பட்ஜெட் கோவையில் பாமக தலைவர் ராமதாசால் வெளியிடப்பட்டது.
# பொதுத்துறை வங்கிகளில் விவசாய கடன் தள்ளுபடி செய்யப்படும்.
# விவசாயத்துக்காக ரூ.43ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு.
# சர்க்கரை ஆலைகள் விவசாயிகளுக்கு தரவேண்டிய நிலுவைத்தொகையை உடனே வழங்கவேண்டும்.
# அனைத்து உணவு தானியங்களுக்கும் மாநில அரசே கொள்முதல் விலை நிர்ணயம் செய்த,ல்.
# நடப்பு நிதியாண்டில் நெல்லுக்கான கொள்முதல் விலை குவிண்டாலுக்கு ரூ.2,811 என நிர்ணயித்தல்.#ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு அனுமதி அளிப்பதில்லை என்றுமுடிவு.
# காவிரிப் பாசன மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், கடலூர் ஆகியவையும், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களும் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலங்களாக அறிவிப்பு.

# நீரா தயாரித்து விற்க விவசாயிகளுக்கு அனுமதி
# சிறுவிவசாயிகள் நலனுக்காக ஊராட்சிதோறும் டிராக்டர் வழங்கப்படும்.
# பனை மரங்கள் வளர்ச்சிக்கு புதிய திட்டம்.
உள்ளிட்ட சிறப்பம்சங்கள் பாமகவின் வேளாண் பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here