தமிழகத்தில் பதவி, வேலைவாய்ப்பு! அதிமுக தொண்டரே தீர்மானிப்பார்கள்!!

ஈரோடு:அதிமுக தொண்டர்கள் விரல் காட்டுபவர்களுக்கே பதவி, வேலைவாய்ப்பு வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்.ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடியில் அதிமுக செயல்வீரர் கூட்டத்தில் அவர் பேசியதாவது:
அதிமுக சிதைந்துவிடும் என்று கனவு காண்கிறார்கள். ஆனால், நூறாண்டு காலம் ஆனாலும் இந்த இயக்கம் நிலைத்திருக்கும்.திமுக செயல்தலைவர் ஸ்டாலின் அதிமுக ஆட்சி ஒருவாரத்தில் கலைக்கப்படும் என்றார். தற்போது எட்டு மாதங்களில் கலைக்கப்படும் என கூறிவருகிறார்.
80ஆண்டுகள் ஆனாலும் அதிமுகவை அசைத்துப்பார்க்க முடியாது.

பேரவை கூட்டத்தொடர் முடிந்ததும் அதிமுக தொண்டர்கள் ஆட்சிதான் தமிழகத்தில் நடக்கவுள்ளது.
நீங்கள் சோர்வடைய வேண்டாம். நீங்கள் எதிர்பார்த்தது நடக்கும்.
நீங்கள் கைகாட்டும் நபர்களுக்கே வேலைவாய்ப்பு, பதவி அளிக்கப்படும்.
இதுகுறித்து அமைச்சரவையில் பேசியுள்ளோம். இவ்வாறு செங்கோட்டையன் பேசினார்.

அதிமுக உறுப்பினர்களுக்குத்தான் அரசுத்திட்டங்களில் பயனடைய முடியும் என்று ஏற்கனவே அமைச்சர் செல்லூர் ராஜூ பேசி சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தார்.
தற்போது அமைச்சர் செங்கோட்டையன் பேச்சு புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here