கண்ணீர்விட்டு கதறவைக்கும் ஐஸ்க்ரீம்!

ஸ்காட்லாந்து: உங்கள் காதலர்/காதலி உங்கள் மீது வைத்திருக்கும் அன்பை இந்த ஐஸ்க்ரீமை கொண்டு சோதியுங்கள் என்று விளையாட்டாக ஒரு விளம்பரம் செய்யப்பட்டுள்ளது.
ஸ்காட்லாந்தில் உள்ளது ரெஸ்பிரோ டெல் டியவொலா ஓட்டல்.இங்குள்ள ஐஸ்க்ரீம் பிரிவில் உலகின் மிகவும் காரமான ஐஸ்க்ரீம் விற்பனை செய்யப்படுகிறது.
இதனை சுவைக்க பலர் சவால் விட்டு வருவார்கள். ஆனால், கண்கள் வியர்த்து உருகி ஓடிவிடுவார்கள் என்று விளையாட்டாக சொல்கிறார் கடைக்காரர்.
இந்த ஐஸ்க்ரீம் முதலில் தயாரானது இத்தாலியில்.

அங்கு ஐஸ்க்ரீம் தயாரிப்பாளர்கள் விளையாட்டாக இதனை செய்துள்ளனர். பின்னர் படிப்படியாக கார ஐஸ்க்ரீம் எல்லோருக்கும் தெரியவந்தது.
காரமும், குளிர்ச்சியும் இதனை சாப்பிடும்போது ஒருசேர தாக்கும். இதனால் தில் இல்லாதவர்கள் இந்த ஐஸ்க்ரீம் பேரைக்கேட்டாலே உறைந்துவிடுவார்கள் என்றுகூறுகிறார் டெல் டியவொலா ஓட்டல் உரிமையாளர்.

காதலர் தினத்தை முன்னிட்டு விளையாட்டாக ஒரு விளம்பரத்தை செய்துள்ளோம் என்றார்.
இந்த ஐஸ்க்ரீம் உலகிலேயே மிகவும் காரமானது. ஆந்திராவில் பிரசித்திபெற்ற மிளகாய் சாஸைவிடவும் 100மடங்கு காரம் அதிகமாம். விலை ஒரு கப் ரூ.1200தானாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here