ரஜினியும், கமலும் அரசியலில் ஜெயிக்க முடியாது!

சென்னை: ரஜினியும், கமலும் அரசியலில் ஜெயிக்க முடியாது என்று தெரிவித்துள்ளார் தேமுதிக தலைவர் விஜயகாந்த்.
சென்னை அம்பத்தூரில் செய்தியாளர்களிடம் அவர் கூறியவை:சினிமாவில்தான் ரஜினி, கமல் எனக்கு சீனியர்கள். அரசியலில் எனக்கு அவர்கள் ஜூனியர்கள்தான். அவர்களால் அரசியலில் ஜெயிக்க முடியாது.
தமிழகத்தில் பாஜகவால் கையையும் ஊன்ற முடியாது. காலையும் ஊன்ற முடியாது.
”தமிழகத்தில் மருத்துவ படிப்புக்கு நீட் தேர்வு கட்டாயம் வேண்டும். ஆனால், அத்தேர்வில் உள்ள முறைகேடுகளை களைய வேண்டும்.மாணவர்கள் பணம் கொடுத்து மருத்துவ சீட் பெற முடியாததால் நீட் தேர்வு அவசியம். முறைகேடுகளைத் தடுக்க நீட் தேர்வு கட்டாயம் வர வேண்டும்.
சொத்துக் குவிப்பு வழக்கில் முதல் குற்றவாளி ஜெயலலிதா என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

எனவே. குற்றவாளியான ஜெயலலிதாவின் உருவப்படத்தை தமிழக சட்டப்பேரவையில் திறக்கக்கூடாது.
உள்ளாட்சித் தேர்தலைச் சந்திக்க நாங்கள் தயாராகவே உள்ளோம். இவ்வாறு விஜயகாந்த் பேட்டியளித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here