மோடியின் குஜராத் மோசம்! லேடியின் தமிழகம் சூப்பர்!!

கரூர்:மோடியின் குஜராத்தைவிடத் தமிழகம் வளர்ச்சியடைந்த மாநிலம் என்று மக்களவைத் துணை சபாநாயகர் தம்பிதுரை கூறியுள்ளார்.

கரூர் கிருஷ்ணராயபுரத்தில் நடைபெற்ற அதிமுக பொதுக்கூட்டத்தில் அவர் பேசுகையில்,
வளர்ச்சிக்கு எடுத்துக்காட்டாக மோடி மாநிலமான குஜராத்தை சொல்லுவார்கள்.
மக்களவைத் துணை சபாநாயகர் என்ற முறையில், நான் இந்தியா முழுவதும் பல்வேறு இடங்களுக்குச் சென்று வருகிறேன்.

பிரதமராக மோடி இருந்தும்கூட அவரது சொந்த மாநிலத்தில் சாலை வசதி, பேருந்து, குடிநீர் வசதிகள் படுமோசமாக உள்ளன.ஆனால், தமிழகத்தில் சாலை, பேருந்து வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் பூர்த்தியடைந்துள்ளன. அதற்குக் காரணம் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா கொண்டுவந்த திட்டங்கள்தான்” என்று கூறினார்.“நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்க வேண்டும் என்பது அதிமுகவின் கொள்கை. அதற்காகப் பாடுபடுவோம்” என்றும் தம்பிதுரை குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here