காதலிக்கு 25 ஐபோன்! சீன வாலிபரின் அசத்தல் பரிசு!!

சென்சன்:காதலிக்கு 25ஐபோன்கள் பரிசளித்து திருமணத்துக்கு சம்மதிக்க வைத்துள்ளார் ஒரு வாலிபர்.
இச்சம்பவம் நடந்தது சீனாவில் உள்ள சென்சன் மாகாணத்தில்.சென்சன் நகரை சேர்ந்தவர் சென்மிங்(29). கம்ப்யூட்டர் கேம்ஸ் உருவாக்கும் நிபுணர்.
2ஆண்டுகளுக்கு முன்னர் லீ(25) என்ற பெண்ணை பார்த்தார்.
இருவரும் காதலிக்க தொடங்கினர். ஆனால், திருமணத்துக்கு தயக்கம் காட்டிவந்தார் லீ.
இதனை தொடர்ந்து 25 ஐபோன்10 வாங்கினார் சென்சன்.

ஒரு ஓட்டல் வரவேற்பரையில் அதனை இதயம் வடிவில் ரோஜாக்கள் தூவி வைத்தார்.
லீயை வரவழைத்து பரிசைக்காட்டி எடுத்துக்கொள்ளுமாறு கூறினார்.
காதலனின் அன்பை கண்ணீர் பொங்க ரசித்துக்கொண்டிருந்தார் லீ.அப்போது நிச்சயதார்த்த மோதிரத்தை அணிவித்து திருமணத்துக்கு சம்மதிக்க வைத்துவிட்டார் சென்மிங்.

ஐபோனை லீ மிகவும் விரும்புவார் என்பதால் வாங்கியதாகவும், லீயின் தற்போதைய வயது25 என்பதால் 25போன்கள் வாங்கினேன் என்றும் சென்மிங் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பான படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here