ரஜினி பாஜக ஆதரவாளர் இல்லை! அவருடன் கூட்டணியும் இல்லை!!

அமெரிக்கா: ரஜினிகாந்த் பாஜக ஆதரவாளர் அல்ல. அவர் கட்சியுடன் நான் கூட்டணி வைக்க வாய்ப்பில்லை என்று தெரிவித்துள்ளார் நடிகர் கமலஹாசன்.
அமெரிக்காவில் உள்ள ஹார்வர்டு பல்கலைக்கழக விழாவில் அவர் பேசியதாவது:கடந்த 37 வருடங்களாக எனது நற்பணி மன்றங்கள் மூலம் அரசியல் சேவை செய்து வருகிறேன். காந்தி, பெரியார் போல நேரடி அரசியலில் ஈடுபட வேண்டாம் என நினைத்திருந்தேன்.
தற்போது நேரடி அரசியலில் ஈடுபட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

அரசியல் பயணத்தைத் தொடங்கும் நான், மாற்றத்தை மக்களிடமிருந்து தொடங்க விரும்புகிறேன். தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு கிராமத்தைத் தத்தெடுத்து அதை முன்னோடி கிராமமாக மாற்றப் போகிறேன். இதில் மக்களின் பங்களிப்பையும் எதிர்பார்க்கிறேன்.மக்களிடம் நான் பணத்துக்காகக் கையேந்தவில்லை. நல்ல கருத்துக்காக கையேந்துகிறேன். தேர்தலில் வாக்களிக்க பணம் பெற்றால், அரசியல்வாதிகள் வெற்றி பெற்றபிறகு பணத்தை எடுப்பதைக் கேட்க முடியாது.
நான் வித்தியாசமானவன் எனக் கூறவில்லை. அரசியலில் வித்தியாசமானவனாக இருக்க விரும்புகிறேன்”.“நானும் ரஜினியும் நண்பர்கள்தான். எங்களுடைய பொது நோக்கம் ஒன்று என்ற போதிலும், இருவரின் பாதைகளும் தனித்தனியானவை.ரஜினியின் அரசியல் கொள்கையின் நிறம் காவி இல்லை என நினைக்கிறேன். என்னுடைய அரசியல் நிறம் காவியல்ல, எனது அரசியல் கொள்கையின் நிறம் கறுப்பு. இவ்வாறு கமலஹாசன் பேசினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here