கமலஹாசன் இணையதள பெயர் மாற்றினார்!

சென்னை:கமலஹாசனின் அரசியல் அமைப்புக்கான இணையதளத்தின் பெயர் மாற்றப்பட்டுள்ளது.
நடிகர் கமலஹாசன் அரசியல் பணிகளில் தீவிரம் காட்ட தொடங்கியுள்ளார்.


மக்களுடன் நேரடி தொடர்புகொள்ள கடந்தாண்டு மய்யம் என்ற பெயரில் இணையதளம் மற்றும் ஆப் தொடங்கியிருந்தார்.
தற்போது அதன் பெயரை நாளை நமதே என்று மாற்றியுள்ளார்.


www.naalainamadhe.maiam.com என்ற புதிய இணையதளத்தில் கல்வி, தொழில், சுற்றுச்சூழல், வேளாண்மை, நீர் மேலாண்மை, நிதி உள்ளிட்ட துறைகளில் கருத்துகள், மேம்பாட்டு திட்டங்கள் ஆகியவற்றை பதிவு செய்யலாம் என தெரிவித்துள்ளார்.


“கிராமியமே நமது தேசியம் என்றால் நாளை நமதே. தமிழர் தமிழால் இணைக்கப்பட்டால் நாளை நமதே. இணைவதற்கு naalainamadhe.maiam.com/ என்று தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் உரையாற்றிய கமல், தனது உரையின் முடிவில் நாளை நமதே என்று கூறியது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here