பாலியல் சீண்டல்களுக்கு எதிராக புகாரளிப்பது பெண்கள் கடமை!

சென்னை: பாலியல் துன்புறுத்தலுக்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்க வலியுறுத்துவது ஒவ்வொரு பெண்ணின் கடமை’ என்று நடிகை அமலா பால் தெரிவித்துள்ளார்.

சென்னை நடனப் பள்ளி ஒன்றில் கொட்டிவாக்கத்தைச் சேர்ந்த தொழிலதிபர் அழகேசன் தனக்குப் பாலியல் ரீதியான அணுகுமுறையில் பேசியதாக அமலா பால் மாம்பலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அழகேசனை போலீசார் கைது செய்தனர்.

அமலா பால் தைரியமாக போலீஸில் புகார் அளித்ததற்காக நடிகர் விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில், “அமலா பாலின் தைரியத்துக்கு தலைவணங்குகிறேன். பாலியல் அத்துமீறலுக்கு எதிராக வழக்கு தொடர நிறையவே தைரியம் வேண்டும்.
இந்த வழக்கில் துரித நடவடிக்கை எடுத்த காவல் துறைக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என தெரிவித்திருந்தார்.


நடிகர் விஷாலுக்குத் தனது ட்விட்டர் பக்கத்தில் நன்றி தெரிவித்த அமலா பால், “இதுபோன்று பாலியல் துன்புறுத்தல்களுக்கு பெண்கள் அனுமதிக்கக் கூடாது.தைரியமாக எதிர்வினை தர வேண்டும் என்பதற்காகவே நான் புகார் அளித்தேன். நான் மட்டுமல்ல; இப்படிச் செய்வது ஒவ்வொரு பெண்ணின் கடமை” என்று பதிவிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here