கோடீஸ்வரர்கள் சொத்து மதிப்பு கிடுகிடு குறைவு!

வாஷிங்டன்: உலக கோடீஸ்வரர்களை எட்டு போடவைத்துள்ளது கடந்த பிப்ரவரி 8.
உலகின் முன்னணி பணக்காரர்களின் சொத்து மதிப்பு கடந்த வியாழக்கிழமை 8ம் தேதி மட்டும்  ரூ.100கோடி குறைந்துள்ளது.

ப்ளூம்பெர்க் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “ உலகின் முதல் பணக்காரராகத் திகழும் அமேசான் நிறுவனத்தின் தலைவர் ஜெஃப் பெசோஸ் சொத்து மதிப்பு வியாழக்கிழமையன்று 5.3 பில்லியன் டாலர் சரிவைக் கண்டுள்ளது. ஹாத்வே நிறுவனத்தின் தலைவர் வாரன் பஃபட் சொத்து மதிப்பு 3.5 பில்லியன் டாலர் சரிவைக் கண்டுள்ளது.
பேஸ்புக் நிறுவனத்தின் தலைவர் மார்க் ஜுக்கர்பெர்க் சொத்து மதிப்பு 3.4 பில்லியன் டாலர் சரிவைக் கண்டுள்ளது.

டெஸ்லா நிறுவனத்தின் தலைவர் எலான் மஸ்க் சொத்து மதிப்பு 1.1 பில்லியன் டாலர் சரிவைக் கண்டுள்ளது.

2017ஆம் ஆண்டின் நவம்பர் முதல் சர்வதேச அளவில் பணவீக்கம் தீவிரமடைந்தது மற்றும் கடன் விகிதங்கள் உயர்ந்தது போன்ற காரணங்களே இந்தப் பெரும் சரிவுக்குக் காரணம் என்று தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here