இந்தியர்களுக்கு 2வது தாய்வீடு அரபுநாடுகள்! பிரதமர் மோடி பெருமிதம்!!

துபாய்: அரபுநாடுகள் இந்தியர்களின் 2வது தாய்வீடு. இந்தியாவும், அமீரகமும் இணைந்து வெளிநாட்டுவாழ் இந்தியர்களின் கனவை நனவாக்கும் என்று உறுதியளித்தார் பிரதமர் நரேந்திர மோடி.
துபாய் ஓபரா அரங்கில் பிரதமர் மோடிக்கு இந்தியர்கள் சார்பில் வரவேற்பு விழா நடைபெற்றது. அதில் அவர் பேசியதாவது:

துபாயில் அதிகளவில் இந்தியர்கள் வாழ்கின்றனர். இங்கு மீண்டும் வந்தது மகிழ்ச்சியளிக்கிறது. இந்தியா ஐக்கிய அரசு எமிரேட்ஸ் இடையிலான உறவு கொடுக்கல்-வாங்கல் என்பதாக இல்லை. அது வர்த்தகத்தை தாண்டியது.

வளைகுடா நாடுகளில் 33 லட்சம் இந்தியர்கள் வேலை பார்க்கின்றனர். அந்நாடுகளின் வளர்ச்சிக்கு உதவி செய்கின்றனர். அரபு நாடுகள், இந்தியர்களுக்கு 2வது தாய் வீடாக திகழ்கிறது.
துபாய்- அபுதாபி நெடுஞ்சாலை பகுதியில் சுவாமிநாராயண் கோயில் கட்ட அனுமதி வழங்கிய பட்டத்து இளவரசருக்கு,125 கோடி மக்கள் சார்பாக நன்றி தெரிவித்து கொள்கிறேன்.

இது உலகமே ஒரு குடும்பம் என்பதற்கு உதாரணமாக திகழ்கிறது.
4 வருடங்களாக நாட்டிற்காக கடுமையாக உழைத்துள்ளேன். அதனால், இந்தியர்களின் நம்பிக்கை அதிகரித்துள்ளது. நாடும் வளர்ச்சியடைந்துள்ளது.

21ம் நூற்றாண்டு இந்தியாவில் மகாத்மா காந்தி கொள்கைகளை பின்பற்றி வருகிறோம். தொழில்செய்ய உகந்த நாடுகள் பட்டியலில் 140ல் இருந்து 100வது இடத்துக்கு உயர்த்தியுள்ளது. இருப்பினும் எனக்கு திருப்தியில்லை. தொடர்ந்து அப்பட்டியலில் முன்னேறுவோம். இவ்வாறு மோடி பேசினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here