பாம்புகள் கட்டிப்புரண்டு சண்டை! பகீர் படங்கள்!!

ப்ளோரிடா: இருபெரும் பாம்புகள் கட்டிப்புரண்டு சண்டையிடும் புகைப்படங்கள் இணையத்தில் அதிகம் பகிரப்படுகின்றன.
ப்ளோரிடாவில் உள்ள இயற்கை அருங்காட்சியகத்தின் நிர்வாகி காலம்ஷிகே இதுகுறித்து கூறுகையில்,

உலகின் கொடியவகை பாம்பு என்று கருதப்படுவது கருநாகம்.
இதன் விஷம் ரத்தத்தில் கலந்தால் உடனே மரணம் ஏற்பட்டுவிடும்.
அதேபோன்று சாம்பல்நிற மலைப்பாம்பும் மூர்க்க குணம் கொண்டது.இவ்விரண்டும் மோதும் புகைப்படம் கிடைத்துள்ளது மிகவும் அரிதான ஒன்று.
தன்னைச்சுருட்டிய மலைப்பாம்பிடம் இருந்து விடுவிக்க கடைசிகட்ட முயற்சியாக அதனை கொத்தியுள்ளது கருநாகம். இந்த மோதலில் இரு பாம்புகளுமே இறந்துள்ளன.  இவ்விருவகை பாம்புகளும் தெற்காசியாவின் வனப்பகுதிகளில் அரிதாக காணப்படும்.
இவ்வாறு காலம்ஷிகே தெரிவித்தார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here