கோலாகலமாக உதயமாகிறது! பப்ளிக் காமெடி/மூவிஸ் சேனல்!!

பெங்களூர்:கன்னட கண்மணிகளுக்காக மணித்துளிதோறும் துடிதுடிப்புடன் செய்திகளை வழங்கிவரும் பப்ளிக் டிவி மக்கள் சேவையில் 6வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.
இத்திருநாளில் பப்ளிக் காமெடி/பப்ளிக் மூவிஸ் என்ற 24மணிநேர பொழுதுபோக்கு சேனலை துவக்குகிறது.ரைட்மேன் மீடியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம் பப்ளிக் டிவி செய்திசேனல், பப்ளிக் மியூசிக் ஆகிய சேனல்களை வெற்றிகரமாக நடத்திவருகிறது.
புதிய சேனலான பப்ளிக் காமெடி/பப்ளிக் மூவிஸ் சேனலை பிப்ரவரி 12ம் தேதி கன்னடத்திரைப்பட துறையை சேர்ந்த நடிகர், நடிகைகள் பங்கேற்று துவக்கிவைக்கின்றனர்.பப்ளிக் காமெடி/பப்ளிக் மூவிஸ் சேனலின் சிக்னல் வெள்ளோட்டத்தை ரைட்மேன் மீடியா பிரைவேட் லிமிடெட் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் ஹெச்.ஆர்.ரங்கநாத், தலைமை செயல் அதிகாரி அருண்குமார், தலைமை அதிகாரி சி.கே.ஹரிஷ்குமார் ஆகியோர் துவக்கிவைத்தனர்.

பிப்ரவரி 16ம் தேதி முதல் பப்ளிக் காமெடி/பப்ளிக் மூவிஸ் சேனலில் நிகழ்ச்சிகளை கண்டுரசிக்கலாம்.

பப்ளிக் டிவி டிஜிட்டல் மீடியாவிலும் தடம் பதித்து வருகிறது.
கன்னடம்(http://publictv.in/) , தமிழ் (http://tamil.publictv.in/), தெலுங்கு (http://telugu.publictv.in/), மலையாளம் (http://malayalam.publictv.in/)ஆகிய மொழிகளில் செய்திச்சேவை நடத்தி வருகிறது.

விரைவில் இந்தி, ஆங்கில மொழிகளில் டிஜிட்டல் வடிவத்தில் செய்திகளை வழங்க உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here