மோடியின் பிற்போக்கு பொருளாதார கொள்கை! ராகுல் கடும் தாக்கு!!

பெல்லாரி: பிற்போக்குத்தனமான பொருளாதார கொள்கைகளை பின்பற்றி நாட்டின் வளர்ச்சிக்கு தீங்கு விளைவித்துவிட்டார் மோடி என்று தெரிவித்தார் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி.கர்நாடக மாநிலத்துக்கு மே மாதம் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், தேர்தல் பிரச்சாரத்தை ராகுல்காந்தி துவக்கி வைத்தார். பெல்லாரி பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது:

காரில் செல்பவர்கள் முன்னே பார்த்துக்கொண்டு செல்லவேண்டும். பின்னால் என்னவருகிறது என்பதை கண்ணாடியில் பார்த்துக்கொண்டே ஓட்டக்கூடாது. மோடி பிற்போக்குத்தனமான கொள்கைகளில் ஒன்று பணம் வாபஸ் திட்டம். அடுத்தது ஜிஎஸ்டி.

இதனால் விவசாயிகள், இளைஞர்கள் தவித்து வருகின்றனர்.  ஆண்டுதோறும் 2கோடி வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று வாக்குறுதி அளித்திருந்தார் பிரதமர். பொய்யான வாக்குறுதிகள் மீது கட்டமைத்த கட்சியாக பாஜக உள்ளது.  பிரதமர் மோடி, காங்கிரஸ் முதல்வர் சித்தராமையாவிடம் கற்றுக்கொள்ளவேண்டும். சித்தராமையா விவசாய கடன்களை தள்ளுபடி செய்துள்ளார். பல்வேறு மக்கள் நலன்சார்ந்த திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளார். வேலைவாய்ப்புகளை அதிகரித்துள்ளார்.நாட்டில் வேலையின்மை, விவசாயிகள் பிரச்சனை, தலித்துகள் மீதான தாக்குதல் அதிகரிப்பு முக்கிய பிரச்சனைகளாக உள்ளன. இதுகுறித்து நாடாளுமன்றத்தில் வாய்திறக்கவில்லை பிரதமர்.

பிரான்சில் இருந்து ரபேல் போர் விமானங்களை வாங்கியதில் முறைகேடு நடந்துள்ளது. பெங்களூரை சேர்ந்த ஹெச்.ஏ.எல். நிறுவனம் போர்விமானங்களை உருவாக்கும் தகுதி இருந்தும் புறக்கணிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு ராகுல்காந்தி பேசினார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here