கும்கி யானைகளுக்கு சிறப்பு முகாம்!

கோவை:பொள்ளாச்சி அருகே ஆனைமலை புலிகள் காப்பகத்தில் வளர்ப்பு யானைகளுக்கு சிறப்பு நலவாழ்வு முகாம் தொடங்கியது.

தமிழக வனத்துறையால் வளர்க்கப்பட்டு, பராமரிக்கப்படும் கும்கி உள்ளிட்ட யானைகள் 48 நாள் புத்துணர்வு முகாமில் பங்கேற்றுள்ளன.
அதனடிப்படையில் ஆனைமலை புலிகள் காப்பகத்தில் உட்பட்ட பகுதியில் 25யானைகளுக்கான நலவாழ்வு முகாம் தொடங்கியது.

அவற்றுக்கு பசுந்தீவனம், மருத்துவ சிகிச்சை, மசாஜ் சிகிச்சை, பல்வேறு உடற்பயிற்சி ஆகியவை அளிக்கப்படும்.  மேலும் சமச்சீர் சத்துணவும் தரப்படுகிறது.
புத்துணர்வு முகாம் காரணமாக டாப்ஸ்லிப் மற்றும் ஆழியாறு பகுதியில் யானை சவாரி 48 நாட்களுக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here