பிட்காயின் கொடுத்து லம்போகினி சொகுசுகார் வாங்கிய இளைஞர்!

அட்லாண்டா:உலகின் அதிநவீன சொகுசுகாரான லம்போகினியை பிட்காயின்கள் கொடுத்து வாங்கியுள்ளார் ஒரு இளைஞர்.
அமெரிக்காவில் உள்ள ஜார்ஜியா மாகாணத்தின் தலைநகர் அட்லாண்டா.
இங்குவசித்து வருபவர் பீட்டர் சாடிங்டன்(35). கம்ப்யூட்டரில் புரோகிராமிங் செய்வதில் நிபுணர்.2011ம் ஆண்டு முதல் க்ரிப்டோ கரன்சி குறித்து கேள்விப்பட்டு அதில் கவனம் செலுத்த தொடங்கினார். மாதந்தோறும் பிட்காயின்களை வாங்க தொடங்கினார்.
2.52டாலர் முதல் 19ஆயிரம் டாலர் வரை கொடுத்து இவர் ஆயிரம் பிட்காயின்களை சேர்த்துள்ளார்.

அவற்றின் தற்போதைய மதிப்பு 3லட்சத்து 21ஆயிரம் சதவீதமாக அதிகரித்துள்ளது.
புத்தாண்டில் கார் வாங்க நினைத்த பீட்டர் சொகுசுகாரான லம்போகினியின் உள்ளூர் டீலரை அணுகி பிட்காயினுக்கு காரை விற்கிறீர்களா எனக்கேட்டார்.

அவர்களும் சம்மதித்தனர். இதனைத்தொடர்ந்து 46பிட்காயின்கள் கொடுத்து லம்போகினி கார் வாங்கியுள்ளார் பீட்டர்.
லம்போகினி கார் விலை இந்திய மதிப்பில் ரூ.6கோடி ஆகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here