ஒலிம்பிக் போட்டிகள் கோலாகல துவக்கம்!

பியாங்சாங்: குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் தென்கொரியாவில் கோலாகலமாக தொடங்கின.
அந்நாட்டில் உள்ள பியாங்சாங் நகரில் 23வது குளிர்கால ஒலிம்பிக் போட்டி தொடக்க விழா நடைபெற்றது.
இதில் 92 நாடுகளைச் சேர்ந்த சுமார் 3 ஆயிரம் வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனர்.

தென் கொரியாவின் பியாங்சாங் நகரில் 23-வது குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் தொடக்க நிகழ்ச்சிகளுடன் கோலாகலமாக இன்று தொடங்குகிறது. தென் கொரியாவின் தீவிர எதிர்ப்பு நாடான வட கொரியாவில் இருந்தும் 150 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

இந்தியாவில் இருந்து 2 வீரர்கள் மட்டுமே கலந்து கொள்கின்றனர். லூஜ் போட்டியில் ஷிவா கேசவனும், கிராஸ் கன்ட்ரி ஸ்கீயிங் போட்டியில் ஜெகதீஷ் சிங்கும் பங்கேற்கின்றனர்.ஆல்பைன் ஸ்கீயிங், பைத்லான் (கிராஸ் கன்ட்ரி ஸ்கீயிங், துப்பாக்கி சுடுதல்), பாப்ஸ்லிக், கிராஸ் கன்ட்ரி ஸ்கீயிங், கர்லிங், பிகர் ஸ்கேட்டிங், பிரீ ஸ்டைல் ஸ்கீயிங், ஐஸ் ஹாக்கி, லூஜ், நார்டிக் கம்பைன்ட், ஷார்ட் டிராக் ஸ்பீடு ஸ்கேட்டிங், ஸ்கெலட்டான், ஸ்கை ஜம்பிங், ஸ்னோ போர்டு, ஸ்பீடு ஸ்கேட்டிங் ஆகிய 15 விளையாட்டுப் போட்டிகளில் 102 தங்கப் பதக்கங்களுக்கான ஆட்டங்கள் நடைபெற உள்ளன.

துவக்க விழாவில் கண் கவர் அலங்கார விளக்குகள், 100-க்கும் மேற்பட்ட நடன கலைஞர்களின் நடனம்,  பாரம்பரிய உடையில் பல்வேறு நாட்டினரின் அணிவகுப்பு நடந்தது. துவக்க நிகழ்ச்சியாக ஒலிம்பிக் தீபம் ஏற்றிவைக்கப்பட்டது. விழாவில் வடகொரிய அதிபர் கிம் ஜங் உன்னின் சகோதரி கிம் யோ ஜாங் கலந்து கொண்டார்.  தென் கொரியா அதிபர் மூன் ஜே,  கிம்யோஜாங்கை வரவேற்று  வாழ்த்துகளை பரிமாறி கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here