தமிழகத்தில் தொடரும் கோவில் தீ விபத்துகள்!

வேலூர்: தமிழக கோவில்களில் தொடர்ந்து விபத்துக்கள் ஏற்பட்டு வருவது பக்தர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது. சத்துவாச்சாரியில் கோவில் தேர்கள் வியாழன் இரவு தீ பிடித்து எரிந்தன.

வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள ஸ்ரீசாலை கெங்கையம்மன் கோவில் மற்றும் பொன்னியம்மன் கோவிலுக்கு சொந்தமான தேர்கள் அருகருகே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், நள்ளிரவில் இரு தேர்களும் திடீரென்று தீப்பிடித்தன.

மின்கசிவால் விபத்து ஏற்பட்டதா அல்லது மர்ம நபர்கள் கைவரிசையா என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நடராஜப் பெருமானின் ஐந்து சபைகளில் ரத்தின சபையாகத் திகழும் திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் கோயிலின் ஸ்தல விருட்சம் பிப்ரவரி 7ம் தேதி இரவு பற்றி எரிந்து சாம்பலானது.

மேலும், பிப்ரவரி 2ம் தேதி இரவு 10.30மணியளவில் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ஆயிரம்கால் மண்டபம் அருகே தீவிபத்து ஏற்பட்டது. இரு தினங்களுக்கு முன்னர் மீனாட்சி அம்மன் கோவில் வளாகத்தில் உள்ள பசுபதீஸ்வரர் சன்னிதியில் மேற்கூரை இடிந்து விழுந்தது.
பிப்ரவரி8ம் தேதி மீனாட்சியம்மன் கோவில் கண்காணிப்பு கேமரா அறையில் தீ பிடித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here