கத்தாரில் கொட்டிகிடக்கும் தொழில் வாய்ப்புகள்! தோகா வங்கி நிர்வாகி தகவல்!!

சென்னை: கத்தார் நாட்டின் முன்னணி வங்கியான தோஹா வங்கியின் கிளை சென்னையில் துவக்கப்பட்டுள்ளது.
துவக்கவிழாவில் பங்கேற்ற அவ்வங்கியின் தலைமை செயல் அதிகாரி சீதாராமன் பத்திரிகையாளர்களை சந்தித்தார்.
அவர் கூறியதாவது: கத்தார்-தமிழகம் இடையே வர்த்தக வாய்ப்பை ஊக்குவிக்கும் விதமாகவும், வளைகுடா நாடுகளில் பணியாற்றும் லட்சக்கணக்கான தமிழர்களுக்கு நிதிச்சேவை வழங்கவும் சென்னையில் கிளை துவக்கியுள்ளோம்.

உலகளவில் பொருளாதாரம் புதிய பாதையில் பயணிக்கிறது. தாராளமயத்தில் இருந்து விலகி பொருளாதார தேசியம் என்று வளர்ந்துவருகிறது.

இ-காமர்ஸ், இ-வர்த்தகத்தால் எங்கிருந்து எங்கும் தொழில் செய்ய முடியும் என்ற சூழல் உருவாகியுள்ளது.

கத்தாருடனான உறவை வளைகுடாநாடுகள் முறித்தன. இதனால் கத்தார் பொருளாதாரம் பாதிக்கப்படும் என முதலில் தகவல்கள் வெளியாகின.
ஆனால், கத்தாரின் பொருளாதாரம் வளர்ந்துள்ளது.
கத்தாரின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி இலக்கைவிட இருமடங்கு அதிகரித்துள்ளது.

இந்தியா உள்ளிட்ட வளரும் நாடுகளில் கத்தாரின் முதலீடுகள் அதிகரிக்க தொடங்கியுள்ளன.
இந்தியர்களுக்கான தொழில் வாய்ப்புகள் கத்தாரில் கொட்டிக்கிடக்கின்றன.
கத்தார் உணவுத்தேவைக்காக வெளிநாடுகளையே நம்பியுள்ளது. உணவு தொழிலுக்கான சிறப்பு பொருளாதார மண்டலங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.உணவு மற்றும் உணவுபதன தொழில் துவங்க வங்கிக்கடன், சலுகைத்திட்டங்கள் உள்ளன.
இந்த வாய்ப்பை தமிழக தொழில்முனைவோர் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இவ்வாறு சீதாராமன் பேட்டியளித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here