அருணாச்சலில் ஒரு அதிர்ஷ்ட கிராமம்! ஒரேநாள் இரவில் அனைவரும் கோடீஸ்வரர்கள்!

போம்ஜா: அருணாச்சல பிரதேச மாநிலத்தில் உள்ள கிராமத்தில் வசிக்கும் அனைத்து குடும்பங்களுமே கோடீஸ்வர குடும்பமாக உயர்ந்துள்ளன.இந்திய எல்லைப்பகுதியில் உள்ள கிராமம் போம்ஜா. அருணாச்சல பிரதேசத்தில் இக்கிராமம் உள்ளது.
இப்பகுதி வழியாக சீனா ஊடுருவ முயற்சி செய்கிறது. சீனப்படைகளை முன்னேற விடாமல் தடுக்க இந்தியப்படைகள் இங்கு குவிக்கப்படுகின்றன.அதற்கு வசதியாக போம்ஜா கிராமத்தில் வசிக்கும் மக்களின் நிலத்தை இந்திய ராணுவம் வாங்கியுள்ளது. இதற்காக ரூ.40.8கோடி ஒதுக்கியுள்ளது.

போம்ஜா கிராமத்தில் தற்போது 31குடும்பங்கள் வசித்து வருகின்றன. குடும்பத்துக்கு குறைந்த பட்சம் ரூ.2.44கோடியில் இருந்து அதிகபட்சமாக ரூ.6.73கோடி வரை பணம் கிடைத்துள்ளது.
இத்தொகையை முதலமைச்சர் பீமாகாண்டு பயனாளிகளிடம் அளித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here