இந்திய முட்டைகளுக்கு சவுதி அரசு தடை!

Egg

சவுதிஅரேபியா:இந்தியாவில் இருந்து கோழி இறைச்சி, முட்டை ஆகியவற்றை இறக்குமதி செய்ய தற்காலிக தடை விதித்துள்ளது சவுதிஅரேபியா.சவுதி அரேபியாவின் விவசாயத்துறை அமைச்சகம் இதுதொடர்பாக உத்தரவிட்டுள்ளது.
இந்தியாவில் இருந்து உயிருடன் கோழி, பறவைகள், முட்டைகள், கோழிக்குஞ்சுகள் ஆகியவற்றை இறக்குமதி செய்யக்கூடாது என உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

கர்நாடக மாநிலத்தின் தலைநகர் பெங்களூருக்கு அருகே பறவைக்காய்ச்சல் பாதிப்பு இருப்பதாக உலக பிராணிகள் நலச்சங்கம் அறிக்கையில் தெரிவித்துள்ளது.                      பாரிஸ் நகரில் உள்ள ஏற்றுமதி கண்காணிப்பு அமைப்பும் எச்சரிக்கை விடுத்துள்ளது.இதனைத்தொடர்ந்து தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பெங்களூரை அடுத்துள்ள தாசரஹள்ளியில் பறவைக்காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் 500கோழிகள் அழிக்கப்பட்டதாக தெரியவந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here