விஷாலை விரட்டுவேன்! ரித்தீஷ் ஆவேசம்!!

சென்னை:நடிகர் விஷாலை நடிகர் சங்கத்தில் இருந்து விரட்டுவேன் என்று நடிகர் ரித்தீஷ் ஆவேசமாக தெரிவித்தார்.

சிவா மனதில் புஷ்பா என்ற படத்தை வராகி என்பவர் இயக்கி உள்ளார்.
இப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.
அதில் பேசிய நடிகரும் முன்னாள் எம்.பி.யுமான ரித்தீஷ், நடிகர்சங்க செயலாளர் விஷாலை நடிகர் சங்கத்தில் இருந்தே விரட்டுவேன் என்றார்.

அவ்விழாவில் பேசிய தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, தமிழகத்தில் இருந்தே விஷாலை விரட்ட வேண்டுமென்றார்.
நடிகர்சங்க தேர்தலில் விஷால் அணி வெற்றிபெற ரித்தீஷ் முக்கியக்காரணமாக திகழ்ந்தார். அவரால்தான் நாடக நடிகர்களின் வாக்குகள் அதிகளவில் விஷாலுக்கு கிடைத்தன.விஷால் ஜெயித்தபின்னர் இருவருக்கும் கருத்துவேறுபாடு எழுந்து ஒருவருக்கு ஒருவர் எதிரியாகி விட்டன.
இந்நிலையில் மேமாதம் நடைபெறவுள்ள நடிகர் சங்க தேர்தலில் ரித்தீஷ் போட்டியிடுவார் என தெரிகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here