பிரதமர், மத்திய அமைச்சர் மீது உரிமை மீறல் பிரச்சனை! காங்கிரஸ் பெண் எம்பி தீவிரம்

டெல்லி:பிரதமர் நரேந்திரமோடி, மத்திய அமைச்சர் ரிஜ்ஜி ஆகியோர் மீது உரிமை மீறல் பிரச்சனை எழுப்ப தயாராகிவருகிறார் காங்கிரஸ் எம்.பி.ரேணுகா சவுத்ரி.
பிரதமர் மோடி புதன்கிழமை மக்களவையில் பேசியபோது, ராமாயணத்தில் எதிர்மறை கதாபாத்திரங்கள் மட்டுமே சத்தமாக சிரிக்கும் என்பதாக கூறினார்.ஆதார் தொடர்பாக பிரதமர் பேசுகையில் ரேணுகா சவுத்ரி சிரித்தார். அவைத்தலைவர் வெங்கய்ய நாயுடு உங்களுக்கு என்ன பிரச்சனை? வேண்டுமானால் மருத்துவர்களிடம் செல்லுங்கள் என்றார்.இதற்கு பதிலளித்த பிரதமரின் பேச்சை சமூக ஊடகங்களில் மத்திய அமைச்சர் ரிஜ்ஜி, பாஜக இணைய நிர்வாகி அமித்மால்வியா ஆகியோர் பதிவிட்டிருந்தனர்.
இதுகுறித்து ரேணுகா சவுத்ரி கூறுகையில், முன்னர் ஆதார் திட்டத்தை எதிர்த்து நீண்ட உரை நிகழ்த்தியுள்ளார் பிரதமர். தற்போது அதனை ஆதரித்து பேசுகிறார். வாஜ்பாய் காலத்தில் இத்திட்டத்துக்கான யோசனை எழுந்தது என்கிறார்.

இதனை நினைத்தபோது என்னையறியாமல் சிரித்துவிட்டேன். பிரதமரின் பேச்சு அவரது கலாச்சாரத்தை காட்டுவதாக உள்ளது.
நாடாளுமன்றத்துக்கு வெளியே அவர் பேசியிருந்தால் அவர் மீது வழக்கு தொடர்ந்திருப்பேன் என்றார்.இதற்கிடையே, பிரதமரின் பேச்சை சமூக ஊடகங்களில் வெளியிட்ட மத்திய அமைச்சர் மீது நாடாளுமன்றத்தில் உரிமை மீறல் பிரச்சனை எழுப்பியுள்ளார் ரேணுகா சவுத்ரி. பிரதமர் மீது இதுபோன்று பிரச்சனை எழுப்ப தயாராகிறார் ரேணுகா.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here