அரசியலில் கூட்டணி! ரஜினி, கமல் பேட்டி!!

சென்னை:அரசியலில் கூட்டணி அமைத்து செயல்படுவது குறித்து ரஜினியும், கமலும் கருத்து தெரிவித்துள்ளனர்.
ஆனந்த விகடன் வார இதழில் கமலஹாசன் தொடர் கட்டுரை எழுதிவருகிறார். அதில்,
“நீங்களும் ரஜினியும் கூட்டு சேர்ந்து தேர்தலைச் சந்திக்க வாய்ப்பு உள்ளதா? – எங்கள் இருவரையும் சேர்த்தே துரத்துகிறது இந்தக் கேள்வி.
இதற்கு ரஜினி சார், ‘காலம் பதில் சொல்லும்’ என்று சொல்லியிருந்தார்.
‘அதையே வழிமொழிகிறேன்’ என்று நான் சொன்னேன்.
உண்மையில் காலம்தான் பதில் சொல்லும். நான் கட்சி ஆரம்பிக்க வேண்டும்.
அவரும் கட்சியை அறிவிக்க வேண்டும். இருவரும் கொள்கை விளக்கங்கள் சொல்ல வேண்டும்.அது பொருந்துகிறதா என்று பார்க்க வேண்டும். அதனால், இது இப்போது எடுக்கக்கூடிய முடிவே கிடையாது.
தவிர, அது தேவையா என்பதை இருவருமே யோசிக்க வேண்டும்” என்று விளக்கமளித்துள்ளார்.செய்தியாளர்களுக்கு இன்று பேட்டி அளித்த நடிகர் ரஜினிகாந்த், முதலில் தமிழகத்தில் சிஸ்டத்தை சரிசெய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
நடிகர் கமலுடன் இணைந்து பணியாற்றுவது குறித்து காலம்தான் பதில் சொல்லும்.நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவது குறித்து உரிய நேரத்தில் முடிவு செய்யப்படும் என்று ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here