கொடைக்கானலில் போதை காளான் விற்பனை ஜோர்!

கொடைக்கானல்: மேஜிக் மஸ்ரூம் எனப்படும் போதை காளான்கள் எந்த தடையும் இன்றி சுற்றுலா ஸ்தலமான கொடைக்கானலில் விற்கப்படுகிறது.

கொடைக்கானலின் தனிச்சிறப்பு வகை உணவுகளில் மஸ்ரூம் எனப்படும் காளானும் இடம்பிடித்துள்ளது. கொடைக்கானல் மலைப்பகுதிகளில் காளான் அதிகம் விளைவிக்கப்பட்டுவருகிறது. இவ்வகை காளான்களில் தடை செய்யப்பட்ட ரசாயனங்கள் தெளிக்கப்படுகிறது.காளான்களில் உள்ள போதைக்கு இதுவே காரணம் என்று கூறப்படுகிறது.
மேலும் ஒரு சில தனியார் உணவகங்களில் நேரடியாக போதை காளான்களை விற்பனை செய்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இங்கிருந்து தென்னகத்தின் பல முக்கிய நகரங்களுக்கும் இவ்வகை போதை காளான்கள் விற்பனைக்கு அனுப்பிவைக்கப்படுகின்றன.

கொடைக்கானலில் செப்டம்பர் முதல் நவம்பர் வரை காளான் சீசன். அக்காலகட்டங்களில் காளான் உணவுவகைகள் அன்று பறித்த காளான்களில் இருந்து செய்யப்படும்.
பிற மாதங்களில் தயாரிக்கப்படும் காளான் உணவுவகைகள் வேதிப்பொருட்கள் சேர்க்கப்பட்டு விஷத்தன்மை அடைகின்றன என்று கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here