ஜியோ டிவி-ல் ஒலிம்பிக் போட்டிகள் ஒளிபரப்பு!

மும்பை: ஒலிம்பிக் போட்டிகளை ஜியோ டிவி ஆப்பில் இலவசமாக கண்டுகளிக்கலாம்.
இதுதொடர்பாக சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியுடன் ஜியோ டிவி ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளது.

ஒலிம்பிக் நிகழ்ச்சிகளை நேரலையாகவும், மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளாகவும் ஒளிபரப்ப ஜியோ டிவி திட்டமிட்டுள்ளது.
தென்கொரியாவில் நடைபெறவுள்ள குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் 102க்கும்மேற்பட்ட போட்டிகள் நடைபெற உள்ளன.

இந்தியா உள்ளிட்ட 90நாடுகளை சேர்ந்த வீரர்கள் இப்போட்டியில் பங்கேற்க உள்ளனர்.
ஜியோடிவி இந்நிகழ்ச்சிகளை தனி சேனலாக ஒளிபரப்ப உள்ளது.
ஜியோடிவி ஆப் வழியாக தற்போது 60ஹெச்டி சானல்கள் உள்ளிட்ட 400டிவி சானல்களை பார்க்கலாம்.

தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட 12 இந்திய மொழிகள், ஆங்கிலம், உருது,நேபாளி,பிரெஞ்ச் மொழிகளின் சானல்களும் ஜியோ டிவி ஆப்பில் உள்ளன.
ஜூன்2018வரை ஜியோ டிவி சேவை இலவசம் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here