ஜார்கண்ட் மாநிலத்தில் ஒரு ரியல் ‘பேட்மென்’

ராஞ்சி:ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள பழங்குடியின பெண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் நபராக உள்ளார் மங்கேஷ் ஷா(29).ஓட்டல் மேனேஜ்மெண்ட் படித்துள்ள இவர் 2014ல் ஐந்து நட்சத்திர ஓட்டலில் தனது வேலையை உதறினார்.தனது தாய் தயாரிக்கும் சானிடரி நாப்கின்களை ஏழை மக்களுக்கு விநியோகிக்க தொடங்கினார்.
தற்போது வாரந்தோறும் 500 நாப்கின்களை ஜார்கண்ட் மாநிலத்தில் பழங்குடி மக்கள் அதிகம் வசிக்கும் கிராமங்களில் சென்று இலவசமாக் விநியோகிக்கிறார்.முதலில் மங்கேஷ் வருகிறார் என்பது தெரிந்ததுமே பெண்கள் வீட்டுக்குள் ஓடிவிடுவார்கள்.
தங்கள் ஆரோக்கியத்தின் மீது அந்தச்சகோதரன் எத்தனை அக்கறை எடுத்துவருகிறார் என்பது தெரிந்ததும் நிலைமை மாறிவிட்டது.
மங்கேஷ் என்று அப்பெண்களுக்கு உச்சரிக்க வரவில்லை எனவே அவரை மங்ரு தாதா (மங்ரு அண்ணா) என்று அன்புடன் அழைக்கிறார்கள்.தற்போது ராஞ்சியில் இருந்து 40கிலோமீட்டர் தூரமுள்ள அனைத்து மலைவாழ் கிராமங்களில் வசிப்பவர்களுக்கு தெரிந்த நபராக விளங்குகிறார் மங்கேஷ்.
இக்கிராமங்களில் உள்ள சுகாதார பணியாளர்கள், தொண்டு நிறுவன நிர்வாகிகள் மங்கேசுக்கு உதவியாக இருந்துவருகின்றனர்.பேட்மேன் என்று என்னைக் கூறும் அளவுக்கு பெரிய காரியம் எதையும் செய்யவில்லை என்று அடக்கத்துடன் கூறுகிறார் மங்கேஷ்.
மலைவாழ் கிராமங்களில் வசிக்கும் பெண்கள் பழைய, கிழிந்த சேலைகளையே நாப்கினாக பயன்படுத்தி வந்தனர். அதிலும் ரத்தப்போக்கினால் அத்துணி ஈரமாகிவிடக்கூடாது என்பதற்காக சாம்பல், மணல், தவிடு ஆகியவற்றில் துணியை தோய்த்து பயன்படுத்திவந்தனர்.

இதனால், பல்வேறு தொற்றுநோய்க்கு ஆளாகியிருந்தனர்.
அவர்களிடம் சுகாதார விழிப்புணர்வு ஏற்படுத்தியது நிறைவை தருகிறது. நாடு முழுவதும் இதனை செய்யவேண்டும் என்ற ஆசை இருக்கிறது என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here