ஆசிரியர்கள் தாக்கியதில் மாணவர்கள் படுகாயம்!

சென்னை: ஆசிரியர்கள் தாக்குதலில் மாணவர்கள் காயமடைந்த சம்பவம் கரூர், பெரம்பலூரில் நடந்துள்ளன.

 

திண்டுக்கல் மாவட்டம் பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் ஹதீகுர் ரஹ்மான்.
மணவாடியில் உள்ள ஆஸ்ரமம் மெட்ரிக் பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வருகிறார்.
அப்பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பன்னீர்செல்வம் என்பவர் பணியாற்றி வருகிறார்.
ரஹ்மான் கிரிக்கெட் விளையாட்டில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். சிறப்பாக விளையாடவும் செய்வார்.பள்ளியின் கிரிக்கெட் அணியிலும், மாவட்ட அளவிலான சில அணிகள் நடத்தும் போட்டிகளிலும் தொடர்ந்து பங்கேற்று வருபவர்.
இது தொடர்பாக பன்னீர்செல்வத்துக்கும், ரஹ்மானுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.ஆத்திரமடைந்த ஆசிரியர் பன்னீர்செல்வம், சேவல் சண்டைக்கு பயன்படுத்தக்கூடிய கத்தியால் ரஹ்மானை குத்தியுள்ளார்.
இதனால் கை, மார்பு, இடுப்பு, தொடை பகுதிகளில் ரஹ்மானுக்கு பலத்த காயம் ஏற்பட்டு அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.

பெரம்பலூர் ஆதனூர் கிராமத்தில் அரசு பள்ளியில் 5 ஆம் வகுப்பு படிக்கும் மகேந்திரன் என்ற சிறுவனை செந்தில் குமார் என்ற ஆசிரியர் கடுமையாக தாக்கியுள்ளார்.
மாற்று திறனாளி என்றும் பாராமல் சிறுவனின் உடல் முழுவதும் காயத்தை ஏற்படுத்தியுள்ளார் ஆசிரியர். அவர் மீது நடவடிக்கை எடுக்கும்படி போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here