உள்ளாட்சி தேர்தல்! தேமுதிக சுறுசுறுப்பு!!

சென்னை:உள்ளாட்சி தேர்தலுக்கு தேமுதிக சுறுசுறுப்பாக தயாராகி வருகிறது.  தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடைபெறவுள்ளது. இத்தேர்தலில் தமிழகம் முழுவதும் மாநகராட்சி, நகராட்சி உள்ளிட்ட உள்ளாட்சி பதவிகளில் தேமுதிக போட்டியிட உள்ளது.

கட்சியின் கீழ்மட்டத்தில் உள்ள உறுப்பினர்களின் மனதின்குரலை கேட்கும் பொருட்டு தேமுதிக பொதுச்செயலாளர் விழுப்புரம் முன்னாள் எம்.எல்.ஏ. வெங்கடேசன் தலைமையில் விசாரணைக்குழு ஒன்றை அமைத்துள்ளார்.தேமுதிக நிர்வாகிகள், தொண்டர்கள் இக்குழுவிடம் தங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம். கட்சியினருக்கு இடையேயான  எதிர்மறைக்கருத்துக்கள், குறைகளை விசாரணைக்குழுவில் நேரடியாகவோ, எழுத்துப்பூர்வமாகவோ தெரிவிக்கலாம் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here