ஷாம்பு குளியல் போடும் எலி! விசேஷ படங்கள்!!

அமெரிக்கா: ஷாம்பு குளியல் போடும் எலியின் விடியோ உலகம் முழுவதும் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது.

அமெரிக்காவை சேர்ந்த பாப் பாடகர் கெவ் ஆன் ஸ்டேஜ். இவர் தனது முகநூல் பக்கத்தில் அடிக்கடி செல்பி விடியோ வெளியிடுவது வழக்கம்.

அதுபோல் கடந்த வாரம் ஒரு விடியோ வெளியிட்டார். சுமார் 3நிமிடங்கள் ஓடும் அந்த விடியோவில் எலி குளிக்கும் காட்சி இடம்பெற்றிருந்தது.3நிமிடம் ஓடும் அந்த விடியோவில் மனிதர்களைப்போன்றே இரண்டு கால்களில் நின்றுகொண்டு உடலில் சோப்புதேய்ப்பதைப்போன்று தேய்த்தும், ஷாம்பு தேய்ப்பதைப்போன்று தலையில் தேய்த்தும் குளிக்கிறது எலி.

இது என்னை ஆச்சர்யப்படுத்திய விடியோ. இது உண்மைதானா என்றும், இந்த விடியோ குறித்து எனக்கும் விளக்குங்கள் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார் அமெரிக்க பாடகர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here