பிரதமர் மோடியின் மனைவி சென்ற கார் விபத்து!

ராஜஸ்தான்: பிரதமர் மோடியின் மனைவி யசோதாபென், ராஜஸ்தானில் நடந்த சாலை விபத்தில் படுகாயம் அடைந்துள்ளார்.ராஜஸ்தான் மாநிலம் கோடா – சித்தூர் நெடுஞ்சாலையில் நடந்த சாலை விபத்தில் யசோதாபென் சென்ற வாகனம் விபத்திற்குள்ளானது. உறவினர் வீட்டு நிகழ்ச்சியில் பங்கெடுக்க யசோதாபென் காரில் சென்றுள்ளார்.இதில் அவருடன் வந்த ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்நிலையில் தலையில் காயமடைந்த யசோதாபென் சித்தூர்கர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.அங்கு டாக்டர்கள் அவருக்கு சிகிச்சை அளித்தனர்.

யசோதாபென் உயிருக்கு ஆபத்து ஏதுமில்லை என்று டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here