காங்கிரஸ் இல்லாத இந்தியா-மோடி! ஒருமணி நேரம் வெற்றுப்பேச்சு-ராகுல்!!

டெல்லி: காங்கிரஸ் இல்லாத இந்தியாவை காந்தியடிகள் விரும்பினார். அதைப்போன்று நானும் விரும்புகிறேன் என்றார் பிரதமர் மோடி.
மாநிலங்களவையில் அவர் பேசியதாவது:
கடந்தகாலங்களில் காங்கிரஸ் கட்சி எதைவிதைத்ததோ அதை அறுவடை செய்துவருகிறது.


காங்கிரசின் நடவடிக்கைகளால் மக்கள் பெரும் வேதனை அடைந்துள்ளனர்.
நாட்டை பிளவுபடுத்தி ஒரு குடும்பத்தின் வளர்ச்சிக்கு மட்டுமே உதவியது காங்கிரஸ்.
ஆனால், எனது உரைக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவிப்பது வேதனை அளிக்கிறது.
சுதந்திரம் அடைந்ததும் காங்கிரஸ் கட்சியை கலைத்துவிட காந்தி யோசனை கூறினார்.
அதேபோன்று காங்கிரஸ் இல்லாத தேசத்தை நான் விரும்புகிறேன்.


காங்கிரஸ் இந்திராவின் இந்தியாவை விரும்புகிறது. நெருக்கடிநிலை, ஊழல், கலகம், சீக்கியர்மீது தாக்குதல், குற்றவாளிகளை வெளிநாடுகளுக்கு தப்பவிடுதல் போன்றவற்றுக்கு காரணமான ஆட்சியை காங்கிரஸ் விரும்புகிறது. இவ்வாறு மோடி காரசாரமாக ஒருமணிநேரம் பேசினார்.


இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த ராகுல்காந்தி, பிரதமர் என்பதை மறந்துவிட்டு மோடி அவையில் பேசுகிறார்.
அவர் பேச்சில் வேலைவாய்ப்பு பிரச்சனை, ரபேல் பிரச்சனை, வளர்ச்சித்திட்டங்கள் குறித்து எதுவும் இல்லை. அரசியல் பேச்சாகவே இருந்தது என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here