எனக்கு திருமணமா? ஸ்ரேயா ஷாக்!!

சென்னை: தமிழ் சினிமாவில் மிகப் பிரபலமாக இருந்த நடிகை ஸ்ரேயா.
நடிகர் ரஜினிகாந்துடன் சிவாஜி , விஜய்யுடன் அழகிய தமிழ்மகன் என பல படங்களில் நடித்தவர். பாலிவுட்டுக்கு சென்ற அவர், அதிக வாய்ப்புகள் இன்றி இருந்துவந்தார். தற்போது அரவிந்த சாமியுடன் நரகாசூரன்.,பிரகாஷ் ராஜூடன் தட்கா படத்தில் நடித்து வருகிறார்.
தெலுங்கில் இவர் நடித்துள்ள காயத்திரி இந்தவாரம் ரிலீசாகிறது.இந்நிலையில், ஸ்ரேயா மார்ச் மாதம் திருமணம் செய்துகொள்ளவுள்ளார்.
திருமணத்துக்குப்பின் ரஷ்யாவில் மாப்பிள்ளையுடன் செட்டிலாகிறார்.
இவ்வாறு செய்திகள் வெளியானதற்கு ஸ்ரேயா மறுப்பு தெரிவித்துள்ளார். திருமணத்துக்கு நான் இன்னமும் தயாராகவில்லை என அவர் குறிப்பிட்டார்.ஸ்ரேயாவின் தாயார் நீர்ஜா இதுகுறுத்து கூறுகையில், மார்ச் மாதம் உறவினர் வீட்டு திருமணத்தில் பங்கேற்கிறார் ஸ்ரேயா.
அதற்காக நகை, புடவை கடைகளுக்கு சென்று வருகிறோம். ஸ்ரேயாவுக்கு திருமணம் என்ற செய்தி தவறானது என தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here