பிரபல கதகளி கலைஞர் மேடையிலே காலமானார்!

திருவனந்தபுரம்: பிரபல கதகளி நடனக்கலைஞர் மடவூர் வாசுதேவன் நாயர்(88) மேடையில் நடனமாடிக்கொண்டிருந்தபோதே மரணமடைந்தார்.

கேரளாவில் கதகளி நடனத்தில் பிரபலமிக்கவர் மடவூர் வாசுதேவன் நாயர் (வயது 88).
செங்கனூர் ராமன் பிள்ளையிடம் கதகளி பயின்ற இவர் 13வயதில் மேடையேறினார்.
இதிகாச கதாபாத்திரங்களில் வரும் எதிர்மறை பாத்திரங்களில் விரும்பி நடிப்பார்.

மக்களுக்கு நல்லவற்றை சொல்வதை காட்டிலும் தீயவற்றின்மேல் பற்று இல்லாமல் பார்த்துக்கொள்வதும் முக்கியமானது என்பது இவர் வாதம்.
2011ம் ஆண்டில் இவருக்கு பத்மபூஷண் விருது வழங்கி இந்திய அரசு கவுரவித்தது.
மாநில அரசு விருதுகளும், பல்வேறு கலை அமைப்புகளும் இவரை கவுரவித்துள்ளன.

செவ்வாய்க்கிழமை இரவு அகஸ்தியகூடு மகாதேவர் கோவிலில் ராவணன் வேடத்தில் கதகளி நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
நடித்துக்கொண்டிருக்கும்போதே மாரடைப்பு ஏற்பட்டு மேடையில் சரிந்துவிழுந்து இறந்தார்.
முழு அரசு மரியாதையுடன் இவரது இறுதிச்சடங்குகள் நடந்தன. இவருக்கு ஒரு மனைவி, 2மகள், ஒரு மகன் உள்ளார்.கடந்த மாதம் திருக்கோவில் நிகழ்ச்சி ஒன்றில் ஒட்டந்துள்ளல் நடனக்கலைஞர் கீதானந்தன் மேடையில் இறந்தது நினைவிருக்கலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here