ஈவ் டீசிங் செய்தவரை கட்டிவைத்து தாக்கிய பெண்கள்!

மங்களூர்: பள்ளிக்குழந்தைகளை கிண்டல், கேலி செய்துவந்த 55வயது நபருக்கு பெண்கள் பாடம் புகட்டினர்.

மங்களூர் பெங்கரே பகுதியில் வசித்துவரும் 55வயது நபர் பள்ளிக்கு பெண் குழந்தைகள் செல்லும்போதும், வீடு திரும்பும்போதும் கிண்டலடித்து வந்துள்ளார்.

இதுகுறித்து அக்குழந்தைகளின் பெற்றோர் அவரை கண்டித்துள்ளனர். ஒரு சில நாட்களுக்குப்பின் அந்நபர் மீண்டும் ஈவ்டீசிங் செய்வதை தொடர்ந்துள்ளார்.

இதனால் கோபம் கொண்ட மாணவிகளின் தாய்மார்கள் ஒன்று திரண்டுவந்தனர்.

ஈவ்டீசிங் செய்த நபரை கடுமையாக தாக்கினர். அவரை அப்பகுதியில் உள்ள மின்கம்பத்தில் கட்டிவைத்தனர்.அந்நபர் மன்னிப்பு கேட்டதை தொடர்ந்து அவரை விடுவித்தனர். இதுதொடர்பான விடியோ வைரலாகி சமூக ஊடகங்களில் பரவியது. அதனைத்தொடர்ந்து அந்நபரை போலீசார் தேடிவந்தனர். இன்று அவர் கைது செய்யப்பட்டார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here