அரிவாளால் கேக்வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய ரவுடி!

சென்னை: அரிவாளால் கேக்வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய ரவுடி,  போலீசில் பிடிபடாமல் சாமர்த்தியமாக தப்பினான்.
சென்னை பூந்தமல்லி அருகே மலையம்பாக்கம் பகுதியில் பண்ணை வீடு ஒன்று உள்ளது.

அங்கு பிரபல தாதா பினு தனது பிறந்தநாளை கொண்டாடினார்.
சினிமா பாணியில், நள்ளிரவில் அவர் அரிவாளால் கேக் வெட்டினார்.
இப்பிறந்தநாள் கொண்டாட்டத்தில் பங்கேற்க மாநகர் முழுவதும் இருந்தும் 100க்கும் மேற்பட்ட ரவுடிகள் வந்திருந்தனர்.
இதுகுறித்து போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.மலையம்பாக்கம் முழுவதும் போலீசார் குவிக்கப்பட்டனர்.  10இன்ஸ்பெக்டர்கள் கொண்ட தனிப்படையினர் பண்ணைவீட்டை முற்றுகையிட்டனர்.
சுதாரித்துக்கொண்ட பினு தனது கூட்டாளிகளுடன் தப்பிச்சென்றார். மேலும் 50ரவுடிகள் அங்கிருந்து தப்பியோடினர். துப்பாக்கி முனையில் 72பேரை போலீசார் கைது செய்தனர்.அவர்களிடமிருந்து 8கார்கள், 38டூவீலர்கள் கைப்பற்றப்பட்டன. 3தனிப்படைகள் அமைக்கப்பட்டு தப்பியோடிய பினுவை போலீசார் தேடிவருகின்றனர்
பல வழக்குகளில் தொடர்புடைய பினு தேடப்படும் குற்றவாளியாக போலீசாரால் அறிவிக்கப்பட்டவர்.சென்னையின் முக்கிய அரசியல்புள்ளியின் ஆதரவால் போலீசார் அவரை நெருங்கமுடியாமல் இருந்தனர். இம்முறை கைக்கு எட்டியும் போலீசாரால் அவரை பிடிக்க முடியவில்லை.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here