எய்ட்ஸ் நோயை பரப்பிய போலி டாக்டர் கைது!

லக்னோ: உத்தரப்பிரதேச மாநிலத்தில் எய்ட்ஸ் நோயை பரப்பியதாக போலி டாக்டர் கைது செய்யப்பட்டார்.
உன்னாவ் மாவட்டத்தில் போலி டாக்டர் ஒருவர் ஊசிபோடுவதற்காக ஒரேஒரு சிரிஞ்சை பயன்படுத்தி பலருக்கு ஊசிபோட்டுள்ளார். இதனால், 40 பேருக்கு எச்ஐவி பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

அம்மாவட்டத்தில் எச்ஐவியால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்திருந்தது. இதற்கு என்ன காரணம் எனக் கண்டறிவதற்காக பங்கார்மாவ் பகுதியில் சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டுப் பொதுமக்களுக்குச் சோதனை நடத்தப்பட்டது.இந்த முகாமுக்கு வந்திருந்த 566 பேரில் 40 பேருக்கு எச்ஐவி தொற்று இருப்பதை மருத்துவ அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
அதிகாரிகள் விசாரணையில் ராஜேந்திர குமார் என்ற போலி மருத்துவர், ஒரே ஊசியைப் பலருக்கும் பயன்படுத்தி சிகிச்சை அளித்திருப்பது தெரியவந்தது.அவர் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
போலிடாக்டர் ராஜேந்திரகுமார் கைது செய்யப்பட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here