நாடுமுழுவதும் சுத்தமாக்க என்ன நடவடிக்கை எடுத்தீங்க? மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கிடுக்கிப்பிடி!

டெல்லி: நாங்கள் ஒன்றும் குப்பை பொறுக்குபவர்கள் அல்ல. எங்களிடம் இதுபோன்ற குப்பையை தள்ளிவிடுவதற்கு என்று காட்டமாக உச்சநீதிமன்ற நீதிபதிகள் மத்திய அரசை கண்டித்தனர். நாடுமுழுவதும் திடக்கழிவு அகற்ற எடுத்த நடவடிக்கையை கூறுங்கள் என்றனர்.

டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட டெல்லி சிறுவனுக்கு பெரிய மருத்துவமனைகள் சிகிச்சை அளிக்க மறுத்தன. இதனால் அச்சிறுவன் இறந்தான்.
இதுதொடர்பாக தாமாகவே முன்வந்து வழக்குப்பதிவு செய்த உச்சநீதிமன்றம் மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியது.டெங்கு கொசுக்கள் உருவாவதை தடுக்கும் வகையில் மத்திய அரசின் நடவடிக்கைகள், திடக்கழிவு மேலாண்மை திட்டம் தொடர்பாக விளக்குமாறு உத்தரவிட்டன.
இதுதொடர்பாக மத்திய அரசு 845பக்க தகவல்களை அவசரகோலத்தில் தயாரித்து நீதிமன்றத்தில் சமர்ப்பித்தன.

அதனை பார்த்த நீதிபதிகள் மதன் லோகூர், தீபக் குப்தா மத்திய அரசு இவ்வழக்கு தொடர்பாக என்ன நினைக்கிறது. எங்களை மயக்க நினைத்தால் அது முடியாது.
உரிய தகவல்கள் இல்லாத குப்பைபோன்று இத்தனை பெரிய பிரமாணப்பத்திரத்தை தாக்கல் செய்கிறீர்கள். நாங்கள் என்ன குப்பை பொறுக்குவோர்களா என்றனர்.திடக்கழிவு மேலாண்மைக்கான மத்திய அரசின் நடவடிக்கை, அதுதொடர்பாக மாநிலம் வாரியாக அமைக்கப்பட்ட குழு, அக்குழுவில் இடம்பெற்ற உறுப்பினர்கள், அக்குழு கூடி எடுத்த தீர்மானங்கள் இவற்றை வரிசைப்படுத்தி அட்டவணையாக நீதிமன்றத்தில் சமர்ப்பியுங்கள் என்று கூறினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here