பங்குச்சந்தையில் வீழ்ச்சி தொடர்கிறது!

மும்பை:மத்திய பட்ஜெட்டை தொடர்ந்து பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சியை சந்தித்து வருகின்றன.
கடந்த சில தினங்களில் ரூ.10லட்சம் கோடி முதலீட்டாளர்களுக்கு நஷ்டம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.இன்று பங்குச்சந்தை கடுமையான வீழ்ச்சியுடனே தொடங்கியது. சென்செக்ஸ் ஆயிரம் புள்ளிகளும், நிப்டி 300புள்ளிகளும் சரிந்தன. பின்னர் சற்று முன்னேறின.
வர்த்தக தின முடிவில் அன்றைய தினத்தில் எட்டிய குறைவான புள்ளியில் இருந்து 700 புள்ளிகள் மீண்டெழுந்தது சென்செக்ஸ். இறுதியில், 561புள்ளிகள் குறைந்து 34,195.94 என்று முடிவடைந்தது.இதேபோன்று நிப்டி 1.58சதவீதம் குறைந்து 10,498.25புள்ளிகளாக முடிவடைந்தது.
இந்திய சந்தைகள் மட்டுமின்றிஐரோப்பியா, ஆசிய நாடுகளின் சந்தைகளும் இன்று சரிவாகவே காணப்பட்டன.
அதிக லாபமீட்டிய பங்குகளாக பஜாஜ்பைனான்ஸ், ஐசிஐசிஐ, டாடாஸ்டீல் இருந்தன.
நஷ்டம் சந்தித்த பங்குகளாக லுபின், டாடாமோட்டார்ஸ், ஹெச்சிஎல் டெக் ஆகியவை உள்ளன.


ரிலையன்ஸ், பிசிஜூவல்லர்ஸ், ஸ்டேட்பேங்க், ஆக்சிஸ் பேங்க், ஆகிய பங்குகளில் பரபரப்பாக வர்த்தகம் நடந்தது.
சர்வதேச சந்தையில் டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பும் குறைந்தது. ஒரு டாலர் விலை ரூ.64.25என்று நிர்ணயிக்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here