மோடியின் ஆட்சி ஒன்மேன் ஷோ! சத்ருகன் சின்ஹா தாக்கு!!

போபால்:ஒன்மேன்ஷோ-வாக மோடி ஆட்சி செய்கிறார் என்று பாஜக எம்.பி. சத்ருகன் சின்ஹா விமர்சனம் செய்துள்ளார்.
மத்தியப் பிரதேச மாநிலம் நரசிங்கபூர் எனுமிடத்தில் மிகப்பெரிய மின் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்காக அரசு விவசாயிகளின் நிலங்களைக் கையகப்படுத்திவருகிறது.  அதற்கு எதிராக விவசாயிகள் போராடிவருகிறார்கள்.இந்த விவசாயிகளுக்கு ஆதரவாக பாஜகவின் மூத்த தலைவர் யஷ்வந்த் சின்ஹா போராட்டம் நடத்திவருகிறார்.
விவசாயிகள் மத்தியில் எம்பி சத்ருகன் சின்ஹா பேசுகையில், “நான் மட்டும் அல்ல பாஜகவில் உள்ள பெரும்பாலான எம்.பிக்கள் இவ்வாறு நினைக்கின்றனர்.மோடி அரசாங்கம் என்பது ஒன் மேன் ஷோ என்றும், கட்சியானது மோடி அமித் ஷா என்ற இரு ராணுவ வீரர்களின் நிர்வாகமாகவும் இருக்கிறது எனக் கருதுகிறார்கள்” என்று விமர்சனம் செய்துள்ளார்.

கட்சியிலும், ஆட்சியிலும் எம்.பி.க்களின், அமைச்சர்களின் பங்கு குறைந்துகொண்டேவருகிறது. மக்களில் பெரும்பாலானோருக்கு, அமைச்சர்கள் எந்தத் துறையைக் கையில் வைத்திருக்கிறார்கள், பொறுப்பு வகிக்கிறார்கள் என்பதுகூடத் தெரியாது. இவ்வாறு அவர் விமர்சித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here