மதுரை கோவில் தீ விபத்து காரணம் தெரிந்தது!

மதுரை: தீவிபத்தை தொடர்ந்து மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சூடம் உபயோகிக்க தடை விதிக்கப்பட உள்ளது.
கடந்த 2ம் தேதி இரவு மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. அதில் 36கடைகள் எரிந்து சாம்பலாயின.

கலைநயம் மிக்க ஆயிரங்கால் மண்டபம் அருகே உள்ள வீரவசந்தராயர் மண்டபம் இடிந்து விழுந்தது.
தீ விபத்து குறித்து விசாரிக்கவும், எதிர்காலத்தில் இதுபோன்ற விபத்துக்களை தவிர்க்க ஆலோசனை வழங்கவும் 5பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
அக்குழுவினர் சிசிடிவி காட்சிகளை ஆய்வுசெய்தனர்.

தீவிபத்துக்குள்ளான பகுதியில் இருந்து கடைசியாக மூடப்பட்ட கடை ஒன்றில் திருஷ்டிசுற்றப்பட்டது.
திருஷ்டி சுற்றிய சூடத்தை அவர்கள் வீசியதால் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என தெரியவந்துள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.வெள்ளிக்கிழமை தோறும் மதுரையில் வணிகர்கள் தங்கள் கடைகள், நிறுவனங்களுக்கு திருஷ்டி சுற்றிய பின்னர் கடையை மூடுவது வழக்கம்.
இதனைத்தொடர்ந்து விரைவில் மதுரை கோவில், கோவில் வளாகத்தில் சூடம் ஏற்ற தடைவிதிக்கப்பட உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here