ஆதீனம் இல்லை ஆசாமிதான்! நித்யானந்தா திடீர் பல்டி!!

சென்னை: 293ஆவது மதுரை ஆதீனம் என்ற தனது அறிவிப்பை திரும்பப்பெறுவதாக நித்யானந்தா சார்பில் உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.மதுரை ஆதீன மடத்தின் 293ஆவது இளைய மடாதிபதியாக நித்யானந்தா தன்னைத் தானே நியமித்துக்கொண்டார். இதற்குத் தடை விதிக்க வேண்டும் என்று ஜெகதலபிராதாபன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்குத் தொடர்ந்திருந்தார்.இந்த மனுவை நீதிபதி மகாதேவன் அமர்வு விசாரித்துவருகிறது. 292ஆவது ஆதீனம் அருணகிரி நாதர் உயிரோடு உள்ளார்.
இந்நிலையில் 293ஆவது ஆதீனம் என்று தன்னைத் தானே நித்யானந்தா எப்படிக் கூறிக்கொள்ள முடியும் என்று கேள்வி எழுப்பியதோடு இதனை வாபஸ் பெற வேண்டும் என்று நீதிமன்றம் கூறியிருந்தது.மேலும், நித்யானந்தா தரப்பு முறையாகப் பதில் மனு தாக்கல் செய்வதில்லை. பிப்ரவரி2ம் தேதிக்குள் அவர் வழக்கில் ஆஜராகாவிட்டால் கைது செய்யவேண்டியதிருக்கும் என்றும் நீதிமன்றம் எச்சரித்தது.

இந்நிலையில், நித்யானந்தா சார்பில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், 293ஆவது மதுரை ஆதீனமாகத் தன்னை அறிவித்துக்கொண்டதைத் திரும்பப்பெற்றுக்கொள்வதாக கூறப்பட்டுள்ளது.
இதனை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் வழக்கை பிப்ரவரி 23ம் தேதிக்கு ஒத்திவைத்தது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here