பிட்காயின் முதலீட்டாளர் மீது வரி! மத்திய அரசு நடவடிக்கை துவக்கம்!!

மும்பை: பிட்காயின்களில் முதலீடு செய்வோர் மீது வரிவிதிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
நேரடி வரிவருவாய்த்துறை சார்பில் பிட்காயின் முதலீட்டாளர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது.இந்தியாவில் பிட்காயினை அனுமதிக்க மத்திய அரசு மறுத்துள்ளது.
அதேநேரம், பிட்காயின் இயங்கும் தொழில்நுட்பமான ப்ளாக்செயினை பயன்படுத்த ஆர்வம் கொண்டுள்ளது.பிட்காயினில் அனைத்து மாநிலங்களிலும் பரவலாக மக்கள் முதலீடு செய்துவருகின்றனர்.
கடந்த டிசம்பர் மாதம் 4லட்சம் முதலீட்டாளர்களை மத்திய அரசு அடையாளம் கண்டுள்ளது.
அவர்களுக்கு வருமானவரிச்சட்டம் 133ஏ பிரிவின்கீழ் நோட்டீஸ் அனுப்பி பிட்காயின் முதலீடு வாயிலாக பெற்ற வருவாய் வரிக்கு உட்படுத்தப்படும் என தெரிவித்துள்ளது.இதுகுறித்து வரித்துறை உயரதிகாரி ஒருவர் கூறுகையில், முதலீடு செய்வதற்கான பணம் எங்கிருந்துவந்தது என்பதுகுறித்த விபரம் தெரிவிக்கவில்லையென்றால் அதற்கு வரிவிதிக்கப்படும்.
அதேபோல், முதலீடு செய்த பணத்தில் இருந்து கிடைக்கும் லாபத்தின் மீதும் வரிவிதிக்கப்படும்.பிட்காயின்கள் மீதான நீண்டகால முதலீட்டு ஆதாயம், குறுகிய முதலீட்டு ஆதாயம் என்று இரு வகைகளில் பிரித்து வரிவிதிக்கும் யோசனையில் அரசு உள்ளதாக தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here