சென்னைவாசிகள் அதிர்ச்சி! ஒருநாள் பயணச்சீட்டு கட்டணம் திடீர் உயர்வு

சென்னை:நகர பேருந்துகளில் ஒருநாள் பயணச்சீட்டுக் கட்டணம் ரூ.80ஆக உயர்த்தப்பட்டுள்ளது.தமிழக அரசு கடந்த ஜனவரி 20ஆம் தேதி பேருந்துக் கட்டணத்தை உயர்த்தியது. ஒருநாள் பயணச்சீட்டு தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டிருந்தது.இரு மடங்கு வரை உயர்த்தப்பட்ட கட்டண உயர்வை எதிர்த்து பொதுமக்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர்.
இதனால், ஜனவரி 28ஆம் தேதி 1 ரூபாய் மட்டும் குறைக்கப்பட்டது.பேருந்துக் கட்டணம் மாற்றியமைக்கப்பட்ட பிறகு, ஒரு நாள் பயணச்சீட்டு கட்டணம் நிர்ணயிக்கப்படாமல், தற்காலிகமாக அந்த வசதி நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இதனால் பயணிகள் பாதிக்கப்பட்டனர்.இந்நிலையில், ஒரு நாள் பயணச்சீட்டின் கட்டணம் 50 ரூபாயிலிருந்து 80 ரூபாயாக ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
தற்போது மாதாந்தர பாஸ் வைத்திருப்பவர்கள் அது செல்லுபடியாகும் தேதிவரை பயணிக்கலாம்.அதன் கட்டணம் ரூ.1300ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
இந்த கட்டண உயர்வு பிப்ரவரி 8ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here