நிருபரின் திருமணம் நேரலையாக ஒளிபரப்பு! ருசிகர சம்பவம்!!

கராச்சி:என்னுடன் இன்று திருமணம் செய்துகொள்ள இருக்கிறீர்கள். இதைப்பற்றி என்ன சொல்ல விரும்புகிறீர்கள்? என்று டிவி ரிப்போர்ட்டர் மணப்பெண்ணிடம் கேட்பதை மக்கள் டிவிக்களில் பார்த்து மகிழ்ந்தனர்.பாகிஸ்தான் கராச்சியில் பிரபலமான சானல்களில் ஒன்று சிட்டி41.
அதில் நிருபராக பணிபுரிபவர் ஹனான்புகாரி.புகாரியின் திருமண நிகழ்ச்சி அவர் பணிபுரியும் டிவியில் லைவாக ஒளிபரப்பப்பட்டது.
அவர் தனது தாய், தந்தை, மாமா ஆகியோரை அறிமுகப்படுத்தி பேட்டியெடுத்தார்.நிகழ்ச்சியில் முத்தாய்ப்பாக மணப்பெண்ணை அவர் பேட்டி எடுத்தார்.


மூன்று ஆண்டுகளாக அப்பெண்ணை சுற்றிச்சுற்றி வந்ததால் இன்று இப்பேட்டியை எடுக்க முடிந்தது என்று அவர் அறிமுக உரையில் கூறினார்.
அதனைக்கேட்ட மணப்பெண் முகத்தில் வெட்கமோ வெட்கம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here