தினகரனுக்கு குக்கர் சின்னம் நிரந்தரம் கிடையாது!

டெல்லி: அதிமுகவில் அதிருப்தி அணியாக இயங்கிவரும் சுயேச்சை எம்.எல்.ஏ. தினகரனுக்கு குக்கர் சின்னம் நிரந்தரமாக ஒதுக்க முடியாது என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தினகரன் குக்கர் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். உள்ளாட்சித் தேர்தலிலும் தங்கள் அணிக்கு குக்கர் சின்னத்தையே ஒதுக்க உத்தரவிடக் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் அவர் வழக்குதொடர்ந்தார்.

இந்த மனுவை விசாரித்த டெல்லி ஐகோர்ட் தேர்தல் ஆணையத்தை பதில்மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டது. தேர்தல் ஆணையம் சார்பில் இன்று பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அதில், தினகரன் அணி அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி கிடையாது.  தினகரன் அணிக்கு கட்சி பெயரை வழங்க தேர்தல் ஆணையம் உத்தரவிட முடியாது.உள்ளாட்சி தேர்தலை, மாநில தேர்தல் ஆணையமே நடத்துகிறது. அதுவே சின்னம் ஒதுக்குவது தொடர்பாக முடிவெடுக்கிறது. இதுதொடர்பாக உத்தரவு பிறப்பிக்கும் அதிகாரம் தலைமை தேர்தல் ஆணையத்துக்கு இல்லை.
தினகரன் தரப்பு மனுவை தள்ளுபடி செய்யவேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

ஆர்.கே.நகர் தேர்தல் 2017 ஆகஸ்ட் நடைபெற திட்டமிடப்பட்டது. அப்போது தினகரனுக்கு தொப்பி சின்னம் ஒதுக்கப்பட்டது.  பணப்பட்டுவாடா புகாரால் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டு மீண்டும் நடந்தது.அப்போது தனக்கு தொப்பி சின்னத்தை தருமாறு மாநில தேர்தல் ஆணையத்திடம் தினகரன் கோரினார். அவரது கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. தற்போது குக்கரும் கையைவிட்டு செல்ல உள்ளது.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here